அடிதூள்..பந்துவீச்சில் மிரட்டிய சேப்பாக்..! தொடர்ந்து 5வது முறை தோல்வியை தழுவியது திருச்சி..!

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய Trichy vs CSG போட்டியில், சேப்பாக் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Chepauk

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய Trichy vs CSG போட்டியில், சேப்பாக் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

7-வது சீசன் டிஎன்பிஎல் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், போட்டிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிற நிலையில், இரவு 7.15 மணிக்கு தொடங்கிய போட்டியில் Ba11sy திருச்சி மற்றும் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் கம்பெனி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் பேட் செய்ய களமிறங்கிய சேப்பாக் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் திருச்சி அணியில் முதலில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கி சரண் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினார்.

அவருடன் இணைந்து களமிறங்கிய ஸ்ரீதர் ராஜு 7 ரன்களில் ஆட்டமிழக்க, அதன்பின் களமிறங்கிய பெராரியோ நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். பிறகு ஆண்டனி தாஸ், கே ராஜ்குமார், ஆர் ராஜ்குமார், எஸ்பி வினோத் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அணிக்கு ஏமாற்றத்தை அளித்தனர்.

நிதானமாக விளையாடிக்கொண்டிருந்த பெராரியோவும் அரைசதத்தை தவறவிட்டு 45 ரன்களில் வெளியேறினார். முடிவில், திருச்சி அணி 13.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 71 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சேப்பாக் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக பெராரியோ மட்டுமே 45 ரன்கள் எடுத்தார்.

திருச்சி அணியில் சிலம்பரசன் அபாரமான பந்துவீச்சால் 5 விக்கெட்டுகளையும், சஞ்சய் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த போட்டியின் சிறந்த வீரராக சிலம்பரசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் திருச்சி அணி தொடந்து 5வது முறையாக தோல்வியைத் தழுவி, பிலேஆப் செல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.