அசாமில் எய்ம்ஸ் மருத்துவமனை; பிரதமர் மோடி, நாட்டிற்காக அர்ப்பணித்தார்.!

வடகிழக்கு மாநிலத்தின் முதலாவது எய்ம்ஸ் மருத்துவமனையை அசாமில் பிரதமர் மோடி, நாட்டிற்காக அர்ப்பணித்தார்.

வடகிழக்கு மாநிலத்தின் முதலாவது எய்ம்ஸ் மருத்துவமனையை அசாமில் பிரதமர் மோடி, நாட்டிற்காக அர்ப்பணித்தார்.

கவுகாத்தி எய்ம்ஸ்:

அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் 1,123 கோடி செலவில் கட்டப்பட்ட வடகிழக்கு மாநிலத்தின் முதலாவது எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்துவைத்து நாட்டிற்காக அர்ப்பணித்தார். மேலும் அசாமில் நல்பாரி, நாகோன் மற்றும் கோக்ரஜார் ஆகிய இடங்களில் 3 புதிய மருத்துவக் கல்லூரிகளை காணொளி மூலமாக பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

ஆயுஷ்மான் கார்டு:

மேலும் 1.1 கோடி பயனாளர்களுக்கு ஆயுஷ்மான் கார்டுகளை, பிரதமர் மோடி வழங்கினார், இந்த கார்டுகளின் மூலமாக ரூ.5 லட்சம் வரை பணமில்லா மருத்துவ சிகிச்சைப் பலன்களைப் பெற முடியும். இந்த எய்ம்ஸ் மருத்துவமனை, அசாமில் உள்ள மக்களுக்கு மட்டுமின்றி மற்ற வடகிழக்கு மாநிலங்களுக்கும் மருத்துவ சேவையை வழங்கும்.

இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி, 546 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள அசாம் அட்வான்ஸ்டு ஹெல்த்கேர் இன்னோவேஷன் இன்ஸ்டிடியூட் (AAHII) க்கு அடிக்கல் நாட்டினார்.

unknown node