மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
இன்றைய ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ அணிக்கு 189 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது டெல்லி கேபிடல்ஸ் அணி.

டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.
இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி சார்பாக, அபிஷேக் போரெல் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோரின் அற்புதமான பார்ட்னர்ஷிப்பின் உதவியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 189 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய தொடக்க வீரர் பொரேல் அதிரடியாக விளையாடி 49 ரன்கள் குவித்தார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு மூன்றாவது ஓவரில் பின்னடைவு ஏற்பட்டது. ஃப்ரேசர் மெக்கர்க் 6 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் ரன் அவுட் ஆன பிறகு, கருண் நாயர் பெவிலியன் ஒரு ரன் கூட எடுக்காமல் திரும்பினார்.
இதையடுத்து, மூன்றாவது விக்கெட்டுக்கு கே.எல். ராகுல் மற்றும் அபிஷேக் போரெல் 63 ரன்கள் சேர்த்தனர். ராகுல் 32 பந்துகளில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அபிஷேக் போரெல் 37 பந்துகளில் 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அக்சர் வெறும் 14 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து டெல்லி அணியின் இன்னிங்ஸை மீண்டும் சுவாரஸ்யமாக்கினார்.
இருப்பினும், அபிஷேக் போரெல் 49 ரன்களில் கேட்ச் கொடுத்து சீசனின் முதல் அரை சதத்தை தவறவிட்டார். இறுதியில், அசுதோஷ் 15 ரன்களும், ஸ்டப்ஸ் 34 ரன்கள் எடுத்திருந்தார்.
கடைசியில், 20 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் குவித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 189 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி. இப்பொது 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் களமிறங்குகிறது.