Ashes23: பென் ஸ்டோக்ஸ் போராட்டம் வீண்... இங்கிலாந்தை பந்தாடி இரண்டாவது வெற்றியை ருசித்த ஆஸ்திரேலியா.!

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் 43 ரன்கள் வித்யாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

Aus Ashes Win23

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் 43 ரன்கள் வித்யாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கையில், பென் ஸ்டோக்சின் போராட்டத்தை தவிடுபிடியாக்கி ஆஸ்திரேலிய அணி இரண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் தேர்வு செய்தது.

இதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 416 ரன்கள் குவித்தது. ஸ்டீவ் ஸ்மித்(110) சதமடித்து அசத்தினார். ராபின்சன் மற்றும் ஜோஷ் டாங் பந்துவீச்சில் 3 விக்கெட்களை வீழ்த்தினர். அதன்பின் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியால் 325 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது. ஸ்டார்க் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 279 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. முதல் இன்னிங்ஸை போல் இரண்டாவது இன்னிங்சிலும் இங்கிலாந்து வீரர்கள் பேட்டிங்கில் சொதப்ப கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு தனியாக போராடினார்.

unknown nodeunknown node

முடிவில் அவரது போராட்டம் வெற்றிக்கு உதவவில்லை, பென் ஸ்டோக்ஸ் 155 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுக்க, ஆஸ்திரேலியா 43 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது. ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியா 2-0 என வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.