அஸ்வின் அபாரம்: ஐந்து விக்கெட்டுகளை இழந்து தவிக்கும் ஆஸ்திரேலியா.!

Aswin takes wickets of Steven Smith, Travis Head and Cameron Green in the first Test between India and Australia

இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் அபாரமாக வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு முதல் டெஸ்ட் போட்டி நேற்று அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் பேட்டிங் தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 89 ஓவர் முடிவில் 6 விக்கெட்டை இழந்து, 233 ரன்கள் எடுத்தது. களத்தில் விருத்திமான் சஹா 9 ரன், அஸ்வின் 15 ரன்களுடனும் இருந்தனர்.

இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய 93.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 244 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக மத்தேயு வேட், ஜோ பர்ன்ஸ் இருவரும் இறங்கினர். நிதானமாக விளையாடி வந்த மத்தேயு வேட் 15-வது ஓவரில் விக்கெட்டை இழந்தார். இவரைத்தொடர்ந்து, ஜோ பர்ன்ஸ் 17-வது ஓவரில் தனது அவுட் ஆனார். இந்த 2 விக்கெட்டையும் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வீழ்த்தினார்.

இதையடுத்து ஒருபக்கம் மார்னஸ் லாபுசாக்னே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், மறுபக்கம் அஸ்வின் அபார பந்துவீச்சில் ஸ்டீவன் ஸ்மித் 1, டிராவிஸ் ஹெட் 7, கேமரூன் கிரீன் 11 ரன்கள் என மளமளவென 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் இந்திய அணி பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா தவித்து வருகிறது. தற்போது, அணி 5 விக்கெட்டுகளை இழந்து, 98 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. மார்னஸ் லாபுசாக்னே மற்றும் கேப்டன் டிம் பெயின் களத்தில் உள்ளனர்.விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.