ஐசிசி-யின் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதை இந்திய அணியின் அதிரடி வீரர் அஸ்வின்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த தொடரில் தமிழக வீரர் அஸ்வின், பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு துறைகளிலும் அசத்தினார். இந்த தொடரில் அஸ்வின், 24 விக்கெட்களை வீழ்த்தியதுடன், 176 ரன்கள் எடுத்துள்ளார்.
மேலும் 77 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய அஸ்வின், 400 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார். அவரின் 400-வது விக்கெட், ஜோஃப்ரா ஆர்ச்சராகும். இந்தநிலையில், ஐசிசி மாதந்தோறும் சிறந்த வீரர் தேர்ந்தெடுத்து, அவர்களை கவுரவிக்கும். அந்தவகையில், முதல் முதலாக ஜனவரி மாதம் இந்த விருதை வழங்கியது.
அந்த விருதை ரிஷப் பண்ட் கைப்பற்றினார். அதனைதொடர்ந்து, பிப்ரவரி மாதத்திற்கான விருதை தமிழக வீரர் அஸ்வின் கைப்பற்றினார். மேலும், ஐசிசி இந்த விருதை அறிமுகப்படுத்தி 2 மாதங்களே ஆன நிலையில், இரண்டு மாதங்களும் இந்திய வீரர்களே இந்த விருதுகளை கைப்பற்றியது, குறிப்பிடத்தக்கது.
unknown node