இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டியின் போது அஸ்வின் மற்றும் லாபுஸ்சனின் சைகை விளையாட்டுகள் வைரல்.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் லாபுஸ்சனிடம், பந்துவீசிய போது அஸ்வின் அவரை திணறடிக்கும் விதமாக அற்புதமான ஒரு டெலிவரி செய்தார்.அப்போது அஸ்வின், மற்றும் லாபுஸ்சன் இருவரும் சைகைகளை பரிமாறிக்கொண்டனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குபிடிக்கமுடியாமல் 177 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்மித் மற்றும் லாபுஸ்சன் இருவரும் ஓரளவு நிலைத்து விளையாடி ஸ்கோரை உயர்த்தினர். லாபுஸ்சன் பேட்டிங் செய்யும் போது இந்திய சுகர்ப்பந்து வீச்சாளர் அஸ்வின் அவர் எதிர்பாராத விதமாக அற்புதமாக ஒரு பந்து வீசினார்.
அதைப்பார்த்து திகைத்துப்போன லாபுஸ்சனிடம், அஸ்வின் மறைமுகமாக தனது விரலை சுற்றி காட்டுவது போல் சைகை செய்தார். அதைக்கவனித்த லாபுஸ்சன், அதற்கு பதிலளிக்கும் விதமாக அவரும் ஏதோ சைகையில் கூறினார். இந்த தொடருக்காக இரு அணிகளும் நீண்ட காலமாக தயாராகி வந்தனர். இந்த போட்டியில் அஸ்வின் மேலும் ஒரு மைல்கல்லாக டெஸ்டில் 450 விக்கெட்கள் மற்றும் 3000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தார். நேற்று இந்திய அணி முதல் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் குவித்து ஆடிவருகிறது. ரோஹித் சர்மா அரைசதமடித்து களத்தில் இருக்கிறார்.
unknown node