படுமோசமான சாதனைக்கு சொந்தக்காரரான பஞ்சாப் கேப்டன் அஸ்வின்!

ஐபிஎல் தொடரின் நேறைய போட்டியில் கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மோதின.

ஐபிஎல் தொடரின் நேறைய போட்டியில் கொல்கத்தா அணியும் பஞ்சாப் அணியும் மோதின.

இதில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி பஞ்சாப் அணியின் பந்து வீச்சை மைதானத்தை விட்டு பறக்க விட்டனர்.

இதில் கொல்கத்தா அணியின் வீரர்கள் உத்தப்பா மற்றும் ராணா அரைசதம் அடித்து அசத்தினர். பின்னர் கடைசியில் களமிறங்கிய ரஸல் பஞ்சாப் அணி பந்து வீச்சாளர்களின் பந்துகளை மைதானத்திற்கு வெளியே பறக்கவிட்டார். அதிரடியாக ஆடிய இவர் 17 பந்துகளில் 48 ரன்கள் அடித்தார். இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 218 ரன்களை குவித்தது.

இந்த போட்டியில் பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் அனைவரின் ஓவரிலும் ரன்களை வாறி வழங்கினர். இதில் பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் 4 ஓவர்கள் பந்து வீசி ஒரு விக்கெட் கூட எடுக்காமல் 47 ரன்களை வாரி வழங்கினார். இதன் மூலம் அவரின் மோசமான பந்து வீச்சில் இது இரண்டாம் இடத்தை பிடித்தது.

0/53 SRH vs 20180/47 KKR vs today0/46 RCB vs 2012