ஆசியக்கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் தான், மாற்ற வாய்ப்பில்லை; வெளியான தகவல்.!

ஆசியக்கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடக்கும் என்றும் இந்தியா விளையாடும் போட்டிகள் வேறு நாட்டில் நடக்க வாய்ப்பு.

ஆசியக்கோப்பை போட்டிகள் பாகிஸ்தானில் நடக்கும் என்றும் இந்தியா விளையாடும் போட்டிகள் வேறு நாட்டில் நடக்க வாய்ப்பு.

இந்த வருடம் செப்டெம்பரில் பாகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த ஆசியக்கோப்பை போட்டிகள் வேறு இடத்திற்கு மாற்றப்படாது, பாகிஸ்தானில் நடைபெறும் என்றும், இந்திய அணிக்கான போட்டிகளுக்கு மட்டும் வேறு நடுநிலையான மைதானங்களில் நடக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான நடுநிலை மைதானங்கள் இன்னும் தேர்வாக வில்லை என்றும் ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், இலங்கை, மற்றும் இங்கிலாந்து நாடுகள் இந்தியாவிற்கான போட்டியை நடத்துவதில் முன்னிலை வகிக்கின்றன என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டு செப்டம்பர் முதல் பாதியில் ஆசிய கோப்பை தொடர், 50 ஓவர்கள் வடிவத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் 6 நாடுகள் இந்த தொடரில் இரு பிரிவுகளாக பங்கேற்கின்றன. இரு பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

கடந்த வாரம் துபாயில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும், ஆசியக் கோப்பையின் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு வெளியே நடத்துவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. 2023 ஆசியக் கோப்பைக்கான ஹோஸ்டிங் உரிமையைப் பெற்றுள்ள பாகிஸ்தான், அதன் தலைவர் நஜாம் சேத்தி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளின் இடையே நிலவிவரும் பாதுகாப்பு மற்றும் அரசியல் காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு, இந்தியா செல்லாது என தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆசியக்கோப்பை தொடர் முழுவதும் பாகிஸ்தானுக்கு வெளியே நடத்தப்பட்டால், போட்டியிலிருந்து பாகிஸ்தான் முழுவதுமாக வெளியேறும் என்று உடனடியாக கூட்டத்தில் பதிலளித்தது.

கடந்த 2018 ஆசியக்கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.