Asian Games: மகளிர் டி20 கிரிக்கெட்.! வங்கதேசத்தை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தது இந்தியா.!

19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் மொத்தமாக 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர்,

INDvsBAN

19வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் மொத்தமாக 45 நாடுகளை சேர்ந்த 12,500 வீரர், வீராங்கனைகள்  பங்கேற்கின்றன. இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 699 வீரர், வீராங்கனைகளை 39 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர்.

அதன்படி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இன்று ஹாங்சோவ்வில் உள்ள பிங்ஃபெங் கேம்பஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதியது.

இதில் டாஸ் வென்ற வங்கதேச மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்து முதலில் களமிறங்கியது. தொடக்கம் முதலே தடுமாற்றத்துடன் விளையாடிய வங்கதேச அணி, இந்திய அணி வீராங்கனைகளின் பந்துவீச்சைத் தாக்கு பிடிக்க முடியாமல் தொடர்ச்சியாக ஆட்டம் இழந்தது. வங்கதேச அணி வீராங்கனைகள் 12, 9, 8 ரன்கள் முறையே குறைவான ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இதனால் வங்கதேச அணி 17.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 51 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி ஸ்மிருதிமந்தனா 7 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆனால், அதன் பிறகு களமிறங்கிய ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் இருவரும் இணைந்து அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர்.

இறுதியில் 8.2 ஓவர்களில் 2 விக்கட்டுகளை இழந்து 52 ரன்கள் எடுத்த இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வென்றது. இதில் ஷஃபாலி வர்மா 17 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 20 ரன்களும் குவித்துள்ளனர். இந்தஅரையிறுதிப்போட்டியில் வென்றதன் மூலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி,பதக்கத்தை உறுதி செய்துள்ளது.