இந்தியா அணியின் பந்து வீச்சில் திணறிய ஆஸ்திரேலியாஅணி !!!!!

This news gives Information about Australia squad for India -india aaniin panthu vichil thinariya austarlia aani

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

50 ஓவரில் 236 ரன்கள் எடுத்துள்ளனர்.

2 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இதன் பின் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.தொடக்க வீரர்களாக ஆரோன் பின்ச் மற்றும்  உஸ்மான் கவாஜா ஆகியோர் களமிறங்கினர்.

மார்கஸ் ஸ்டோணிஸ்  37(53 பந்துகள் ) ரன்கள்,உஸ்மான் கவாஜா (76 பந்துகள் )50 ரன்கள் , மேக்ஸ்வெல் (51 பந்துகள் ) 40 ரன்கள் அலெக்ஸ் காரே 37 பந்துகளுக்கு 36*ரன்கள்(ஆட்டம் இழக்கவில்லை),பாட் கம்மின்ஸ்  0* ரன்கள்(ஆட்டம் இழக்கவில்லை). இறுதியில் 50 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 236 ரன்கள் எடுத்துள்ளனர்.

இதையடுத்து 237 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி உள்ளது இந்தியா அணி.

தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். ஷிகர் தவான்  0 ரன்னில் அவுட் ஆனார். ரோகித் சர்மா 37 பந்துக்கு 24* ரன் எடுத்துள்ளார்.அதன் பின் இறங்கிய விராட் கோலி 26 பந்துக்கு 20* ரன் எடுத்துள்ளார்.