ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு.!

ஆஸ்திரேலிய அணியின் டி-20 கேப்டன் ஆரோன் ஃபின்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் டி-20 கேப்டன் ஆரோன் ஃபின்ச் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் டி-20 கேப்டனாக இருந்துவரும் 36 வயதான ஆரோன் ஃபின்ச், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக 76 டி-20 போட்டிகளில் கேப்டனாக வழிநடத்திய ஆரோன் ஃபின்ச், 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி-20 உலகக்கோப்பையில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவிற்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுத்தந்தார்.

மேலும் 2015இல் சொந்தமண்ணில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பையையும் ஆஸ்திரேலியாவிற்கு கேப்டனாக இருந்து பெற்றுத்தந்தார், மற்றும் 12 வருட  சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் ஃபின்ச் விளையாடியுள்ளார். 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அடுத்த டி-20 உலகக் கோப்பை வரை நான் விளையாடமாட்டேன் என்பதை உணர்ந்து, பதவி விலகுவதற்கான சரியான தருணம் இதுவாகும் என்று ஃபின்ச் தெரிவித்தார்.

கடந்த அக்டோபர் 2022இல் தான், ஃபின்ச், டி-20 கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவதற்காக ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார், அப்போது வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் ஆஸ்திரேலியாவின் ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஃபின்ச் ஒட்டுமொத்தமாக 146 ஒருநாள் போட்டிகளில் கிட்டத்தட்ட 39 சராசரியிலும், 103 டி-20 சர்வதேசப் போட்டிகளில் 34.28 சராசரியுடன் விளையாடியிருக்கிறார்.

மேலும் 2013 இல் இங்கிலாந்துக்கு எதிராக 156 ரன்கள் மற்றும் 2018 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக 172 ரன்கள் குவித்ததன் மூலம், டி-20 போட்டிகளில் இருமுறை அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளார். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைவர் லாச்லன் ஹென்டர்சன் கூறுகையில், ஃபின்ச் ஆஸ்திரேலியாவின் சிறந்த வீரர்களில் ஒருவர், அவர் களத்தில் ஒரு கடுமையான போட்டியாளராகவே எப்போதும் விளையாடினார் என்று கூறினார்.