#AUSvSL: டாஸ் வென்ற ஆஸ்திரேலியா ஃபீல்டிங் தேர்வு!

Today's match of the World Cup series between Australia and Sri Lanka.

உலகக்கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா ஆகிய இரு அணிகளிக்கிடையே பலப்பரீச்சை.

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் 22-வது போட்டியில் இன்று சூப்பர் 12 குரூப் 1-ல் இருக்கும் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும், தசுன் ஷனக தலைமையிலான ஸ்ரீலங்கா அணியும் பலப்பரீச்சை நடத்துகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது.

ஏற்கனவே, ஆஸ்திரேலியா அணி தென்னாப்ரிக்கா அணியுடனான போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுபோன்று, பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் ஸ்ரீலங்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இன்று களமிறங்கியுள்ளது.

ஆஸ்திரேலியா அணி வீரர்கள்:

டேவிட் வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஸ்ரீலங்கா அணி வீரர்கள்:

குசல் பெரேரா(விக்கெட் கீப்பர்), பத்தும் நிஸ்ஸங்க, சரித் அசலங்கா, அவிஷ்க பெர்னாண்டோ, வனிந்து ஹசரங்க, பானுக ராஜபக்ச, தசுன் ஷனக(கேப்டன்), சாமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமீர, லஹிரு குமார, மஹீஷ் தீக்ஷன ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.