மழையால் டெஸ்ட் போட்டி தற்காலிகமாக நிறுத்தம் -பிசிசிஐ அறிவிப்பு..!

The Test match has been suspended due to rain.

மழை காரணமாக டெஸ்ட் போட்டி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்தியா, இங்கிலாந்து இடையில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, முதலில் களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸில் 65.4 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 183 ரன்கள் எடுத்தனர்.

இதைத்தொடர்ந்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை விளையாடி வருகிறது. இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்திய அணி 46.1 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 125 ரன்கள் எடுத்துள்ளனர். இந்நிலையில், மழை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என பிசிசிஐ தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளது.

தற்போது களத்தில் கேஎல் ராகுல் 57*, பண்ட் 7* ரன்கள் எடுத்து இருவரும் விளையாடி வருகின்றன. இங்கிலாந்து அணி 58 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

unknown node