மருத்துவமனையில் இருந்து பிசிசிஐ தலைவர் கங்குலி டிஸ்சார்ஜ்!

BCCI chief secretry Sourav Ganguly, who was again admitted to the hospital for treatment due to chest pain, was discharged today.

நெஞ்சு வலி காரணமாக மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிசிசிஐ தலைவர் கங்குலி, இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதால், கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு மீண்டும் ஆஞ்சியோ பிளாஸ்டி முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

மேலும், கங்குலியின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சை பெற்று வந்தபிசிசிஐ தலைவர்கங்குலி, இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.