இங்கிலாந்து , ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 22-ம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
நேற்று 359 ரன்கள் இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை இங்கிலாந்து தொடங்கியது. தொடக்க வீரர்கள் ரோரி பர்ன்ஸ் 7 ,ஜேசன் ராய் 8 ரன்னுடன் வெளியேறினர். அதன் பின்னர் ஜோ ரூட் , ஜோ டென்லி இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்ந்தனர். ஜோ ரூட் 77 , ஜோ டென்லி 50 ரன்களுடன் வெளியேற பின்னர் இங்கிலாந்து அணி 286 ரன்களுக்கு 9 விக்கெட்டை இழந்து வெற்றி பெற 73 ரன்கள் தேவை என்ற பரிதாப நிலையில் இருந்தது.
இந்நிலையில் களத்தில் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாக் லீச் இருவர் மட்டுமே இருந்தன. லீட்சை மறுமுனையில் நிறுத்தி வைத்து கொண்டு டெஸ்ட் போட்டி என்று பார்க்காமல் ஒருநாள் போட்டியில் அடிப்பது போல பென் ஸ்டோக்ஸ் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் பந்துகளை மைதானத்தின் நாலா புறமும் பென் ஸ்டோக்ஸ் பவுண்டரி ,சிக்ஸர்களாக பறக்கவிட்டார்.இதன் மூலம் 10.2 ஓவரில் 76 ரன்கள் குவிக்கப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் மறுமுனையில் இருந்த லீட்சை 17 பந்துகளை மட்டுமே சந்திக்க வைத்து ஒட்டு மொத்த ஆட்டத்தையும் பென் ஸ்டோக்ஸ் விளையாடினர்.
ஜாக் லீச் 1 ரன் மட்டும் எடுக்க மீதம் உள்ள 72 ரன்களை பென் ஸ்டோக்ஸ் குவித்து. கடைசிவரை ஆட்டமிழக்காமல் 135 ரன்களுடன் களத்தில் நின்றார்.இதே போல் உலக கோப்பையில் இறுதிப் போட்டியில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் இங்கிலாந்து அணிக்கு கோப்பையை பெற்றுத் தந்தார்.
அந்த நிகழ்ச்சி இன்றும் மறக்க முடியாத நிலையில் மீண்டும் டெஸ்ட் போட்டியில் மறக்க முடியாத நிகழ்ச்சியை நிகழ்த்தியுள்ளார் பென் ஸ்டோக்ஸ்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…