இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 263 ரன்கள் எடுத்து ஆல் அவுட்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய ஆணி தனது முதல் இன்னிங்ஸில் 263 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் இன்று டெல்லியில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது.
unknown nodeஇதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது. இந்த போட்டியில் டேவிட் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி 50 ரன்களில் தனது முதல் விக்கெட்டாக டேவிட் வார்னர் 15 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். களத்தில் இருந்த உஸ்மான் கவாஜா ஆஸ்திரேலிய அணிக்கு ரன்களை குவித்தார். 45.5-வது ஓவரில் 81 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மான் ஆட்டமிழந்தார். இந்த போட்டியில் உஸ்மான் கவாஜா(81 ரன்கள்) , பீட்டர் ஹேண்ட்ஸ் கோம்ப் (72 ரன்கள்) மற்றும் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் (33 ரன்கள்) ஆகியோர் அதிக ரன்கள் எடுத்தனர்.
unknown nodeஇந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியாக ஆஸ்திரேலியா 263 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் முகமது ஷமி 4, அஸ்வின் மற்றும் ஜடேஜா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியுள்ளனர். தற்பொழுது இந்தியா அணி விளையாட களமிறங்கியுள்ளது. தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் விளையாடுகின்றனர்.