இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 2-வது டெஸ்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆஸ்திரேலிய அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடரில் விளையாடிவருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில் இன்று டெல்லியில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி: ரோஹித் சர்மா (C), கே.எல்.ராகுல், செதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவீந்திர ஜடேஜா, ஸ்ரீகர் பாரத் (W), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், முகமது ஷமி, முகமது சிராஜ்
ஆஸ்திரேலிய அணி: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், அலெக்ஸ் கேரி (W), பாட் கம்மின்ஸ் (C), டாட் மர்பி, நேதன் லயன், மேத்யூ குனெமன்