BGT2023: கில் அரைசதம், இந்தியா நிதான ஆட்டம்; உணவு இடைவேளையில் 129/1 ரன்கள் குவிப்பு.!

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்டில் 3வது நாள் உணவு இடைவேளை முடிவில் இந்தியா 129/1 ரன்கள் குவிப்பு.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்டில் 3வது நாள் உணவு இடைவேளை முடிவில் இந்தியா 129/1 ரன்கள் குவிப்பு.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.

இதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் உஸ்மான் கவாஜா(180 ரன்கள்) மற்றும் கேமரூன் க்ரீன்(114 ரன்கள்) ஆகியோரின் சதத்தால் 480 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்களும், ஷமி 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதனையடுத்து களமிறங்கிய இந்தியா நேற்று முதல் நாள் ஆட்டநேர முடிவில் 36/0 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ரோஹித் சர்மா  35 ரன்களில் குனேமன் பந்தில் ஸ்லிப்பில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு புஜாரா(22* ரன்கள்) மற்றும் கில்(65* ரன்கள்) நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். உணவு இடைவேளை முடிவில் இந்தியா 1 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணி, ஆஸ்திரேலியாவை விட 351 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.