இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4-வது டெஸ்டில் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 3/0 ரன்கள் குவிப்பு.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையே நடந்து வரும் பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டி குஜராத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 480 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 180 ரன்களும், கேமரூன் க்ரீன் 114 ரன்களும் குவித்தனர். இந்தியா தரப்பில் அஸ்வின் 6 விக்கெட்களும், ஷமி 2 விக்கெட்களும் வீழ்த்தியிருந்தனர். இதனையடுத்து களமிறங்கிய இந்தியா முதல் இன்னிங்சில் 571 ரன்கள் குவித்தது.
சிறப்பாக விளையாடிய கோலி 186 ரன்களும், சுப்மன் கில் 128 ரன்களும், அக்சர் படேல் அதிரடியாக விளையாடி 79 ரன்கள் குவித்து இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ஆஸ்திரேலிய அணியில் நேதன் லயன் 3 விக்கெட்களும், மர்பி 3 விக்கெட்களும் வீழ்த்தியுள்ளனர்.
இதனையடுத்து இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நான்காவது நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன்கள் குவித்துள்ளது.