துருக்கி நாடகத்தில் விராட்கோலியா ? முகமது அமீர் ட்வீட்

கொரோனா வைரஸ் அனைவரையும் ஊரடங்கில் வீட்டிற்குள் முடக்கியுள்ளது. இதற்கு விளையாட்டு வீரர்களும் விதிவிலக்கல்ல .உலகமுழுவதும் ஐபிஎல் முதல் ஒலிம்பிக் வரை பல்வேறு

கொரோனா வைரஸ் அனைவரையும் ஊரடங்கில் வீட்டிற்குள் முடக்கியுள்ளது. இதற்கு விளையாட்டு வீரர்களும் விதிவிலக்கல்ல .உலகமுழுவதும் ஐபிஎல் முதல் ஒலிம்பிக் வரை பல்வேறு விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டுள்ளது.இதில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் வீடுகளில் குடும்பத்தினரோடு நேரத்தி செலவழித்து வருகின்றனர் .அவ்வப்போது சமூகவலைதளங்களில் ரசிகர்களுடன் தங்கள் நேரத்தை களைத்து வருகின்றனர் .

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலிக்கு  மனைவி அனுஷ்கா ஷர்மா முடிவெட்டும் வீடியோ சமூகவலைதளத்தை சில நாட்களுக்கு முன்னர் ஆக்கரமித்தது .இந்நிலையில் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் ஊரடங்கில் தனது வீட்டில் வெப் சீரியஸ் பார்த்து நேரத்தை கழித்து வருகிறார் .

இந்நிலையில் அவர் பார்க்கும் பிரபலமான துருக்கி  நாடகத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் விராட்கோலி போல் இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் . அந்த பதிவில் அவர் விராட்கோலியை டேக் செய்து அண்ணா நீங்களா இது என்று கேள்வி எழுப்பியுள்ளார் .

unknown node