இந்திய அணியில் பும்ரா சேர்ப்பு! பிசிசிஐ அறிவிப்பு.!

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. காயம் காரணமாக சில காலமாக இந்திய அணியில் இருந்து விலகியிருந்த ஜஸ்பிரித் பும்ரா, தற்போது காயத்திலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளார்.

10 ஆம் தேதி கவுகாத்தியில் தொடங்கும் ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் பும்ரா சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்திய அணி:ரோஹித் சர்மா (C), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (W.), இஷான் கிஷன் (W.), ஹர்திக் பாண்டியா (VC), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா , முகமது. ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.