கிரிக்கெட்டில் இப்படி கூட சிக்சை தடுக்கலாமா; வியந்த சச்சின், வீடியோ உள்ளே.!

கிரிக்கெட்டில் வீரர் ஒருவர் அற்புதமாக சிக்சை தடுத்த வீடியோவை  சச்சின், தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

கிரிக்கெட்டில் வீரர் ஒருவர் அற்புதமாக சிக்சை தடுத்த வீடியோவை  சச்சின், தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

கிரிக்கெட் வீரர் ஒருவர் பேட்ஸ்மேன் அடித்த பந்தை சிக்ஸ் லைனில் கேட்ச் எடுக்க முயன்ற வித்யாசமான யுக்தியை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வியந்து பாராட்டியுள்ளார். அந்த வீரர் பவுண்டரி லைனில் வந்த கேட்ச்சை எடுக்கும்போது அவர் எல்லைக் கோட்டை தாண்டிவிட்டார், அதைக்கவனித்த அந்த வீரர் பந்தை தனது காலால் லாவகமாக ஆடி ஃபுட்பால் கிக் செய்வது போல் உதைத்து மற்றொரு வீரர் அந்த பந்தை கேட்ச் எடுத்தார்.

இந்த முயற்சியின் மூலம் கிரிக்கெட்டில் கேட்ச் எடுப்பதை மேலும் அடுத்த படிக்கு அந்த வீரர் எடுத்து சென்றுள்ளார் என பலரும் பாராட்டி வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் இதனைப்பாராட்டி, இந்த வீடீயோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ஃபுட்பால் விளையாடத்தெரிந்த வீரர் ஒருவரை நீங்கள் கிரிக்கெட் விளையாட வைத்தால், இது தான் நடக்கும் என சச்சின் வேடிக்கையாக கூறியுள்ளார்.

unknown node