நேற்று நடந்த இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்து அணிகள் லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது .இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 241 ரன்கள் குவித்தனர். பின்னர் 242 ரன்கள் இலக்குடன் களமிங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டை இழந்து 241 ரன்கள் அடித்தனர்.அதனால் போட்டி டையில் முடிந்தது.
unknown nodeபின்னர் இரு அணிகளுக்கும் சூப்பர் நடத்தப்பட்டது. முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 6 பந்தில் 15 ரன்கள் குவித்தனர்.பின்னர் 16 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 6 பந்தில் 15 ரன்கள் அடித்ததன் மூலம் மீண்டும் போட்டி டை ஆனது.
பின்னர் இறுதி போட்டியில் அதிக பவுண்டரி அடித்த அணிகளின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் முதல் முறையாக உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி உலகக் கோப்பையை கைப்பற்றியது.
unknown nodeஇந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த என்ற சாதனையை கேப்டன் கேன் வில்லியம்சன் படைத்தது உள்ளார்.நடப்பு உலகக்கோப்பையில் கேன் வில்லியம்சன் 10 போட்டிகளில் விளையாடி 578 ரன்கள் குவித்தார்.
இதற்கு முன் 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இலங்கை அணி கேப்டன் ஜெய வர்த்தனே 548 ரன்கள் அடித்து இருந்தார்.அதுவே உலகக்கோப்பை தொடரில் கேப்டன்களில் அடித்த அதிக ரன்னாக இருந்தது. தற்போது அந்த சாதனையை கேப்டன் கேன் வில்லியம்சன் முறியடித்து உள்ளார்.