ஜடேஜாவிற்கு பதிலாக களமிறங்கிய சாஹல்...!

final over of the first innings, Starc threw the ball to Ravindra Jadeja's helmet. Chahal has replaced Ravindra Jadeja as the Indian fielder.

ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக சாஹல் 2-வது இன்னிங்ஸில் வீரராக களமிறங்கியுள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஆரோன் பின்ச் , பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 161 ரன்கள் எடுத்தனர்.

முதல் இன்னிங்ஸில் இறுதி ஓவரில் ஸ்டார்க் வீசிய பந்து ரவிந்திர ஜடேஜாவின் ஹெல்மெட்டில் பட்டு காயம் அடைந்தார். இதனால் இந்திய அணி பீல்டிங் செய்யும்போது ரவீந்திர ஜடேஜாவுக்கு பதிலாக மாற்று வீரராக சாஹல் களம் இறங்கியுள்ளார். ஜடேஜாவின் காயம் குறித்து மருத்துவ குழு ஆய்வு செய்து வருகிறது பிசிசிஐ தகவல் தெரிவித்துள்ளது.

ஜடேஜாவுக்கு பதிலாக மாற்று வீரராக களமிறங்கிய  சாஹல் 2 ஓவர் வீசி 10 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டை பறித்துள்ளார்.