சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா போல இருக்க வேண்டும்..! மனம் திறந்த ருதுராஜ்.!

சிஎஸ்கே-வில் சுரேஷ் ரெய்னா போல இருக்க ருதுராஜ் விருப்பம்.

சிஎஸ்கே-வில் சுரேஷ் ரெய்னா போல இருக்க ருதுராஜ் விருப்பம்.

16-வது ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட் அசத்தலான பார்மில் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சுரேஷ் ரெய்னா போல சீரான வீரராக இருக்க வேண்டும் என ருதுராஜ் கெய்க்வாட் விருப்பம் தெரிவித்துள்ளார்.

2021-ன் ஐபிஎல் தொடரில் சிறந்த பார்மில் இருந்த ருதுராஜ், அதிக ரன்களை குவித்து ஆரஞ்சு கேப் வென்றார். இந்த வருடமும் ஐபிஎல் தொடக்க ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 92 ரன்கள் எடுத்ததன் மூலம் இந்த சீசனின் ஒரு அற்புதமான தொடக்கத்தை பெற்றார்.

மேலும், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான போட்டியிலும் அதிரடியாக விளையாடி  57 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் சென்னை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.  போட்டிக்கு பிறகு பேசிய ருதுராஜ், சுரேஷ் ரெய்னா தான் எனது மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கே-வில் விளையாடத் தொடங்கிய முதல் போட்டியில் இருந்து கடைசி போட்டி வரை, அணியின் முக்கிய வீரராக இருந்து சீராக விளையாடினார் என்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சுரேஷ் ரெய்னாவை போல தானும் ஒரு வீரராக இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை எனவும் ருதுராஜ் கெய்க்வாட் கூறினார்.