சென்னை டெஸ்ட் – இந்திய அணியில் மூன்று மாற்றங்கள்..!

Washington Sunder, Nadeem and Bumra have been dropped from the Indian squad and Akshar Patel, Kuldeep Yadav and Mohammad Siraj have been added.

இந்திய அணியில் அக்ஸர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் இந்திய அணி கேப்டன் கோலி பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், நதீம், பும்ரா ஆகியோர் நீக்கம் செய்யப்பட்டு அவர்களுக்கு பதிலாக அக்ஸர் பட்டேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சென்னை மைதானம் முதல் இரண்டு நாள் பேட்டிங்கில் சாதகமாகவே இருக்கும் என்பதால் இப்போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. ஏனென்றால் முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இரண்டு நாள்கள் இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.