டி-20 கிரிக்கெட்டில் பாபர் அசாம் மிகக்குறைந்த இன்னிங்சில் 9,000 ரன்களை எடுத்து, புதிய உலகசாதனையை படைத்துள்ளார்.
unknown nodeபாகிஸ்தான் சூப்பர் லீக் PSL 2023 தொடரில் எலிமினேட்டர் போட்டியில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெஷாவர் சல்மி அணியின் பாபர் அசாம் 39 பந்துகளில் 64 ரன்கள் எடுத்த போது அவர் டி-20 கிரிக்கெட்டில் 9,000 ரன்களை எட்டினார்.
இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் 9,000 ரன்களை மிக வேகமாக கடந்த வீரர் என்ற சாதனை படைத்தார். பாபர் 245 இன்னிங்ஸ்களில் விளையாடி 9,000 ரன்களைக் கடந்துள்ளார்.
unknown nodeஇதற்கு முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான கிறிஸ் கெயில் 249 இன்னிங்ஸ்களில் விளையாடி 9000 ரன்களை வேகமாகக் கடந்த வீரர் என்ற சாதனை படைத்திருந்தார். இதன்மூலம் தற்போது பாபர் அசாம் அந்த உலகசாதனையை முறியடித்துள்ளார்.