தொடரும் ஆக்சிஜன் பற்றாக்குறை..! ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி 90,000 ரூபாய் நிதி..!!

PM for oxygen requirement of Indian hospitals. Srivastava Goswami has donated Rs 90,000 to the Cars Fund.

இந்திய மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்கு ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி 90,000 ரூபாய் வழங்கியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வரும் நிலையில், நாள் ஒன்றுக்கு 3.50 லட்சத்திற்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவல் அதிகமுள்ள மாநிலங்களில் கட்டுப்பாட்டுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மருந்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் கொரோனாவை வெல்ல பெரும் ஆயுதமாக தடுப்பூசியே உள்ளது.

இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின்  கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி இந்திய மருத்துவமனைகளின் ஆக்சிஜன் தேவைக்காக  ரூ. 90,000 தொகையை வழங்கியுள்ளார். இதற்கு முன்பு ஆக்சிஜன் தேவைக்காக பி.எம். கேர்ஸ் நிதிக்கு 50,000 டாலர் தொகையை  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ் வழங்கியிருந்தார் என்பதை குறிப்பிடத்தக்கது.