சிஎஸ்கே விற்கு எதிராக நாளை ரெயின்போ நிற ஜெர்சியுடன் களமிறங்கும் டெல்லி அணி.!

DC RainbowJersey

ஐபிஎல் 2023 தொடரின் சென்னை அணிக்கு எதிராக ரெயின்போ நிற ஜெர்சியுடன் விளையாடவுள்ளதாக டெல்லி அணி நிர்வாகம் அறிவிப்பு.

நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப்போட்டிகள் முடிவடைந்து பிளேஆப் சுற்று போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில் இன்னும் மூன்று அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற போராடிக் கொண்டிருக்கின்றன. தற்போது வரை குஜராத் அணி மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 10 அணிகளுக்கும் இன்னும் ஒரு போட்டியே மீதமுள்ள நிலையில் வரும் 21ஆம் தேதியோடு லீக் சுற்றுப்போட்டிகள் நிறைவடைகின்றன.

இந்நிலையில் டெல்லி அணி நாளை சென்னை அணியுடன் தனது கடைசி லீக் ஆட்டத்தை டெல்லியிலுள்ள அருண் ஜெட்லீ ஸ்டேடியத்தில் விளையாடுகிறது. இந்த போட்டியில் டெல்லி அணி வானவில் நிற ஜெர்சியுடன் விளையாடப் போவதாக அறிவித்துள்ளது. இதனை டெல்லி கேபிட்டல்ஸ் அணி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.

பெங்களூரு, குஜராத், லக்னோ அணிகளுக்கு பிறகு ஐபிஎல் 2023 இல் சிறப்பு ஜெர்சியுடன் விளையாடும் நான்காவது அணி டெல்லி ஆகும். டெல்லி அணி எதற்காக வானவில் நிற ஜெர்சியுடன் விளையாடப்போகிறோம் என அதிகாரபூர்வமாக வெளியிடாவிட்டாலும், ரசிகர்கள் இது ஓரின சேர்க்கையாளர்கள் (LGBT) சமூகத்திற்கான விழிப்புணர்வாக இருக்கலாம் என்று கூறிவருகிறார்கள்.</p

>

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்