அடுத்த சீசனிலும் தல தோனி? ரெய்னா கொடுத்த குட் நியூஸ்!

நீங்கள் இந்த ஆண்டு ஐபிஎல் சீசனை Missed Call மாதிரி விட்டுட்டீங்க. இது கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என தோனியிடம் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Hero Image

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் போட்டிக்குப் பிறகு, எம்.எஸ். தோனி அடுத்த அடுத்த சீசனில் விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பெரிய விவாதம் எழுந்துள்ளது.

குறிப்பாக, இந்த சீசனில் இதுவரை ஒரு போட்டியிலும் விளையாடாத தோனி, அடுத்த ஆண்டு IPL-ல் மீண்டும் களமிறங்க வாய்ப்பு இருக்கலாம் என்று சுரேஷ் ரெய்னா தெரிவித்திருப்பது CSK ரசிகர்களுக்கு புதிய மகிழ்ச்சி கலந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

திங்கள்கிழமை நடைபெற்ற போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்த பிறகு, வீரர்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி வந்தனர். அப்போது சுரேஷ் ரெய்னா, தோனியை நேரில் சந்தித்து பேசியதாக கூறினார். அந்த உரையாடலின் போது, தோனியிடம் “நீங்கள் IPL 2026 சீசனை Missed Call மாதிரி விட்டுட்டீங்க. இது கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. அடுத்த ஆண்டு கண்டிப்பாக திரும்பி வர வேண்டும்” என்று தான் கூறியதாக ரெய்னா தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த தோனி, “உடல் கொஞ்சம் ஒத்துழைக்கவில்லை” என்று கூறியதாகவும், அதாவது தனது உடல்நிலை மற்றும் fitness பிரச்சனைகள் குறித்து குறிப்பிட்டதாகவும் ரெய்னா கூறினார். இருப்பினும், அடுத்த ஆண்டு விளையாட மாட்டேன் என்று தோனி நேரடியாக கூறவில்லை என்பதால், அவர் மீண்டும் வர வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

மேலும், “நாங்கள் எதையும் நம்பவில்லை. நீங்கள் அடுத்த ஆண்டு கண்டிப்பாக விளையாட வேண்டும் என்று சொன்னேன். ரசிகர்களும் உங்களை எதிர்பார்க்கிறார்கள். அதற்கு தோனி ‘பார்க்கலாம்’ என்று கூறினார். தோனி ‘பார்க்கலாம்’ என்று சொன்னால், அவர் மீண்டும் கடுமையாக பயிற்சி செய்து வர வாய்ப்பு இருக்கிறது” என்று ரெய்னா கூறினார்.

இந்த சீசனில் தோனி முழுவதும் விளையாடாமல் இருந்தது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது. காலில் ஏற்பட்ட கால் தசை காயம் (calf injury) காரணமாக அவர் IPL 2026 முழுவதும் ஓய்வில் இருந்தார். இருப்பினும், சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி home match-க்கு அவர் அணியுடன் வந்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

போட்டி தொடங்குவதற்கு முன்பு தோனி அணியின் பேருந்தில் இருந்து இறங்கியவுடன், மைதானத்தில் இருந்த ரசிகர்கள் முழக்கமிட்டு அவரை வரவேற்றனர். இந்த சீசனில் அதிக கவனம் தன்னிடம் திரும்பிவிடக் கூடாது என்பதற்காக, பல போட்டிகளுக்கு அவர் அணியுடன் கூட பயணம் செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இப்படியான சூழலில் அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா அல்லது இந்த சீசனோடு ஓய்வு பெறப்போகிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இதற்கிடையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேஆஃப் வாய்ப்பும் மிகவும் சிக்கலான நிலைக்கு சென்றுள்ளது. தற்போது சென்னை அணி கடைசி லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸை பெரிய வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த சீசனிலும் தல தோனி? ரெய்னா கொடுத்த குட் நியூஸ்!