உலகக்கோப்பை தொடர் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதிலும் இந்திய அணி நேற்றைய கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
இந்திய அணி முதலிடத்திற்கு சென்றதை தொடர்ந்து இந்திய அணி ரசிகர்கள் பல மீம்ஸ் செய்து ட்விட்டரில் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடினர்.இந்நிலையில் இன்று இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் , விக்கெட் கீப்பருமான தல தோனியின் பிறந்த நாளை ட்விட்டரில் ரசிகர்கள் அலற விட்ட வருகின்றனர்.
ட்விட்டரில் சென்னை , இந்தியா ,உலகம் ஆகிய மூன்று ட்ரெண்டிங்கில் #HBDThalaDhoni ,#Mahi ,#Thala ,#HappyBirthdayMSD ,#CaptainCool என்ற ஹேஸ் டேக் பயன்படுத்தி ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் பல பிரபலங்கள் ட்விட்டரில் தல தோனிக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
unknown nodeunknown nodeunknown node