INDvENG: டாஸ் வென்ற இங்கிலாந்து.. முதலில் பேட்டிங் செய்ய காத்திருக்கும் இந்தியா!

England won the toss and elected to bowl in the first T20I match against India, which is holding in Narendra Modi Stadium, Ahmedabad

இந்தியாவிற்கு எதிரான முதல் டி-20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை இந்திய அணி 3 – 1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அதனைதொடர்ந்து 5 போட்டிகளை கொண்ட டி-20 தொடர், இன்று முதல் அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கவுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன், பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இந்த போட்டியில் விளையாடும் 11 வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்தவகையில்,

விளையாடும் வீரர்களின் பட்டியல்:

இந்திய அணி:

கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல்.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், ஈயோன் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், ஜோஃப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், மார்க் வூட்