இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.., அணியை அறிவித்தது இங்கிலாந்து.!
ஜூன் 20 முதல் நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

டெல்லி: ஐபிஎல் தொடர் முடிந்ததை அடுத்து, இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்காக சுப்மான் கில் தலைமையில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த டெஸ்ட் தொடர் ஜூன் 20 முதல் தொடங்க உள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஜூன் 20-25 வரை லீட்ஸில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளன.
இந்நிலையில், இங்கிலாந்து அணி இன் முதல் டெஸ்ட் போட்டிக்கான 14 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, இந்திய அணி Squad அறிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து ஆண்கள் டெஸ்ட் அணியில் ஜேமி ஓவர்டன் மீண்டும் இடம் பெற்றுள்ளார், அதே நேரத்தில் கஸ் அட்கின்சன் காயம் காரணமாக வெளியேறியுள்ளார்.
இங்கிலாந்து அணி
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஷோயப் பஷீர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், சாம் குக், ஜாக் க்ரௌலி, பென் டக்கெட், ஜேமி ஓவர்டன், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங்கு, கிறிஸ் வோக்ஸ்.
A simply HUGE series awaits 🙌
Our squad for the 1st Test is HERE 👇
🏴 #ENGvIND 🇮🇳
— England Cricket (@englandcricket) June 5, 2025
இந்திய அணி:
ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர் மற்றும் துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் தர்ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ்ஸ்ப்டன் ஜூரல், துருவ் ஜுரல் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் மற்றும் குல்தீப் யாதவ்.
இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அட்டவணை:
- முதல் டெஸ்ட்: ஜூன் 20-24, லீட்ஸ்
- இரண்டாவது டெஸ்ட்: ஜூலை 2–6, பர்மிங்காம்
- மூன்றாவது டெஸ்ட்: ஜூலை 10-14, லண்டன் (லார்ட்ஸ்)
- நான்காவது டெஸ்ட்: ஜூலை 23–27, மான்செஸ்டர்
- ஐந்தாவது டெஸ்ட்: ஜூலை 31 – ஆகஸ்ட் 4, கென்னிங்டன் ஓவல் (லண்டன்)