இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தனது ஓய்வை அறிவித்த டு பிளெசிஸ்..!
தென்னாப்பிரிக்காவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரும், முன்னாள் கேப்டனுமான டு பிளெசிஸ் இன்று டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
36 வயதான இவர் தனது தென்னாப்பிரிக்கா அணிக்காக 69 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4163 ரன்கள் எடுத்துள்ளார்.
View this post on Instagram
இந்த காலகட்டத்தில் அவர் 10 சதங்கள் மற்றும் 21 அரைசதங்கள் அடித்துள்ளார். டு பிளெசிஸ் தனது ஓய்வு குறித்து ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் பதிவின் மூலம் தெரிவித்தார். அவர் கையில் ஒரு பேட்டை எடுத்து, தன்னைப் பற்றிய ஒரு படத்தைப் பகிர்ந்துகொண்டு, ‘என் இதயம் தெளிவாக உள்ளது, புதிய அத்தியாயத்திற்குள் செல்ல நேரம் சரியானது’ என எழுதியுள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் கூட அவர் சிறப்பு எதுவும் விளையாடவில்லை, பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் விளையாடிய கடைசி 2 டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்சில் 55 ரன்கள் மட்டுமே எடுத்தார். பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில், தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் தொடரை 0–2 என்ற கணக்கில் இழந்தது.
டு பிளெசிஸ் 2012 நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டி மூலம் அறிமுகமானார். டு பிளெசிஸ் தனது கடைசி போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக ராவல்பிண்டியில் விளையாடினார். கடந்த ஆண்டு டிசம்பரில் இலங்கைக்கு எதிராக டெஸ்டில் 199 ரன்கள் அடித்தார். இதுவே டு பிளெசிஸ் டெஸ்ட் போட்டியில் அடித்த அதிக ரன்கள், தென்னாப்பிரிக்காவுக்காக 36 டெஸ்ட் போட்டிகளுக்கு டு பிளெஸி தலைமை தாங்கியுள்ளார்.