மழையால் தாமதமான இறுதிப் போட்டி..! ஓவர்கள் குறைந்தால் சிஎஸ்கே அணிக்கான DLS இலக்குகள் என்ன.?

It is said that the overs for the Chennai team are likely to be shortened as the final match of the IPL series was delayed due to rain.

DLS targets

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி மழையால் தாமதமானதால் சென்னை அணிக்கான ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில்விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்தது.

இதில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 96 ரன்களும், விருத்திமான் சாஹா 54 ரன்களும், சுப்மன் கில் 39 ரன்களும் குவித்தனர். சென்னை அணியில் மதீஷ பத்திரன 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து, 215 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கில் களமிறங்கிய சென்னை அணி 3 பந்துகளில் 4 ரன்கள் எடுக்க மழை பெய்து ஆட்டம் தாமதமானது.

இதனால், ஓவர்கள் குறைக்கப்பட்டால் சென்னை அணியின் இலக்கு 19 ஓவர்களில் 207 ரன்களும், 18 ஓவர்களில் 198 ரன்களும், 17 ஓவர்களில் 190 ரன்களும், 14 ஓவர்களில் 162 ரன்களும், 10 ஓவர்களில் 123 ரன்களும், 5 ஓவர்களில் 66 ரன்களும் எடுக்க வேண்டியது இருக்கும்.