டெவான் கான்வே, தொடர்ந்து 2 ஆண்டுகளில் முதலாவது சதத்தை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரருமான டெவான் கான்வே, 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முதலாவது சதத்தை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கராச்சியில் நடைபெற்றுவரும் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில், டெவான் கான்வே முதல் இன்னிங்சில் 122 ரன்கள் குவித்து, 2023 ஆம் ஆண்டின் முதல் சதத்தை அடித்துள்ளார். இதேபோல் கான்வே, கடந்த 2022 ஆம் ஆண்டின் முதல் சதத்தையும், வங்கதேசத்திற்கு(122 ரன்கள்) எதிராக எடுத்திருந்தார்.