நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியாவின் பேட்டிங் வரிசையில் இஷான் கிஷான் மூன்றாவதாக இறங்க வேண்டும் என சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மென் இன் ப்ளூ (Men in Blue) அணி நியூசிலாந்தின் பிளாக் கேப்ஸு (Black Caps) அணியுடன் மூன்று ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் போட்டி ஹைதராபாத்தில் நாளை நடைபெறவிருக்கிறது. இந்த தொடரில் கே.எல்.ராகுல் இடம்பெறாததால் கிஷான் விக்கெட் கீப்பராக விளையாடுவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
ஒரு நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கரிடம் இந்த முறை அணியில் ஷுப்மான் கில் மற்றும் ராகுலுக்கு பதிலாக கில் மற்றும் இஷான் கிஷான் விளையாடுவார்களா..? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு கோலி தனது மூன்றாவது இடத்தை ஏற்கனவே தனது அணியின் வெற்றிக்காக தியாகம் செய்துள்ளார் என்று மஞ்ச்ரேக்கர் பதிலளித்தார்.
கிஷான் தான் விளையாடிய ஒன்பது ஒருநாள் போட்டிகளில் இரண்டுமுறை மட்டுமே முதலாவதாக களமிறங்கினார். அவர் நான்கு முறை மூன்றாவது இடத்திலும் மூன்று முறை நான்காவது இடத்திலும் பேட்டிங் செத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.