இன்று பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்கிறார் கங்குலி

இன்று பிசிசிஐ தலைவராக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பொறுப்பேற்க உள்ளார்.
பிசிசிஐ நிர்வாகிகள் தேர்வு கடந்த சில தினங்களாக நடைபெற்றது .இதற்காக பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ் கங்குலி வேட்பு மனு தாக்கல் செய்தார்.வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் கங்குலி தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
மேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா செயலாளர் பதவிக்கும் ,பொருளாளர் பதவிக்கு பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாகூர் சகோதரர் அருண் துமல் ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
இந்த நிலையில் இன்று பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவராக கங்குலி பொறுப்பேற்க உள்ளார்.இவரை போல அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா,அனுராக் தாகூர் சகோதரர் அருண் துமல் உள்ளிட்டோரும் பொறுப்பேற்க உள்ளனர். தலைவராக பதவியேற்ற பின் கங்குலி பிசிசிஐ -யை செம்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவார் என்ற எதிர்பார்ப்பு வெகுவாக எழுந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025