விராட் கோலி என்னுடைய மகன் மாதிரி! சேத்தன் ஷர்மா உருக்கம்!

முன்னாள் இந்திய தேர்வாளர் சேத்தன் ஷர்மா சில கிரிக்கெட் வீரர்களை பற்றி மரியாதை இல்லாமல் பேசிய வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பி

Chetan Sharma about Virat Kohli

முன்னாள் இந்திய தேர்வாளர் சேத்தன் ஷர்மா சில கிரிக்கெட் வீரர்களை பற்றி மரியாதை இல்லாமல் பேசிய வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பெரும் பரபரப்பி ஏற்படுத்தி இருந்தது. இது ஒரு புறம் இருக்க மற்றோரு பக்கம் இந்திய வீரர்கள் ஊக்க மருந்து எடுத்துக்கொண்டு விளையாடுவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இவர் இந்திய தேர்வாளர் பதவியில் இருந்த சமயத்தில் தான் விராட் கோலி கேப்டன் பதவிகளில் இருந்து விலகினார். இதனால் இதற்கு சேத்தன் ஷர்மா ஒரு முக்கிய காரணம் என்றும் முன்னதாகவே பேசப்பட்டது. ஆனால், தற்போது சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சேத்தன் ஷர்மா விராட் கோலி தனது மகன் மாதிரி என்று பேசியுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

#U19WC2024 : இங்கிலாந்தை பந்தாடி ஆஸ்திரேலியா அபார வெற்றி ..!

இது குறித்து பேசிய அவர் “விராட் கோலி எனது மகன் போன்றவர், நான் ஏன் அவரைப் பற்றி தவறாகப் பேச வேண்டும்? அவர் நலனுக்காக நான் எப்போதும் கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். அவர் மீண்டும் வந்து சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதம் அடிப்பார் என்று நம்புகிறேன். என்னை பொறுத்தவரையில் விராட் கோலி கிரிக்கெட் சாம்பவான்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது இந்தியா டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இரண்டு போட்டிகளில் விராட் விளையாடமாட்டார் என்பது தெரியும். அவர் அடுத்ததாக மூன்றாவது போட்டியில் விளையாடுவதை பார்க்கவேண்டும் என ரசிகர்களை போலவே ஆவலுடன் காத்துள்ளேன்” எனவும் சேத்தன் ஷர்மா  கூறியுள்ளார். இதன் மூலம் விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலக சேத்தன் ஷர்மா  காரணம் இல்லை போல எனவும் கேள்வி எழும்பியுள்ளது.