Ganguly - Virat kohli [file image]
இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நான் நீக்கவில்லை என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி வலம் வந்த சர்ச்சைக்கு பதில் அளித்துள்ளார். எம்எஸ் தோனிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டனாக விராட்கோலி செயல்பட்டு வந்தார்.
அதுவும், பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்றபோது, கோலி கேப்டனாக செயல்பட்டு வந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி தோல்விக்கு பிறகு கேப்டன் பதவியை ராஜினாமா செய்து விராட் கோலி ஷாக் கொடுத்தார்.
திடீரென டி20 கேப்டன் பதவி, அதன்பின் ஒருநாள் கேப்டன் பதவி மற்றும் கடைசியாக 2022ம் ஆண்டு டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பிசிசிஐ செய்யும் அரசியலே காரணம் என்று பலரும் கூறி வந்தனர். அதுமட்டுமில்லாமல், விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு சவுரவ் கங்குலியே முக்கிய காரணம் என்று ரசிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்தன.
அதாவது, ஐபிஎல் தொடரில் விராட் கோலி, சவுரவ் கங்குலியின் கைகளை குலுக்காமல் சென்றது, இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்தியது போன்ற செயலால் இந்த விமர்சனங்கள் எழுந்தது. இதனிடையே, ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பு ரோகித் சர்மாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
எனவே, கேப்டன் பதவியில் இருந்து கோலி நீக்கப்பட்ட விவகாரத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. குறிப்பாக, பிசிசிஐ தலைவராக இருந்த சவுரவ் கங்குலி மீதும் விமர்சனங்கள் குவிந்தது. இந்த நிலையில், கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டது குறித்து பிசிசிஐ முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
அனைத்து பெருமையும் தோனிக்கே.. சதம் அடித்த விண்டீஸ் கேப்டன் புகழாரம்..!
இதுதொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது, இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலியை நான் நீக்கவில்லை. இந்த சர்ச்சை குறித்து நான் பலமுறை விளக்கமளித்துள்ளேன். ஆனாலும் மீண்டும் மீண்டும் கேட்கப்படுகிறது என தெரிவித்தார்.
இந்திய அணியின் டி20 கேப்டனாக செயல்பட விராட் கோலி விரும்பவில்லை. எனவே, கோலி முடிவுக்கு பின், நீங்கள் டி20 கேப்டனாக செயல்பட விரும்பவில்லையெனில் ஒட்டுமொத்தமாக வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் கேப்டன் பதவியில் இருந்து (ஒருநாள் மற்றும் டி20) நீங்கள் விலகுவது நல்லது என்று நான் கூறினேன்.
வெள்ளைப்பந்து கிரிக்கெட்டிற்கு (ஒருநாள் மற்றும் டி20) தனி கேப்டன், சிவப்பு பந்து கிரிக்கெட்டிற்கு (டெஸ்ட்) தனி கேப்டன் இருக்கட்டும் என தெரிவித்ததாக கூறியுள்ளார். மேலும், 3 வகை கிரிக்கெட்டிலும் இந்திய அணியின் கேப்டன் பதவி வகிக்க விராட் கோலி விரும்பாததால் ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பெற்றுகும்படி நான் கூறினேன்.
கேப்டன்சியை ஏற்றுக் கொள்ளுமாறு ரோகித் சர்மாவிடம் ஆலோசனை நடத்தியது உண்மைதான். இந்திய அணியின் ஒட்டுமொத்த கேப்டன்சியையும் ஏற்றுக்கொள்ள ரோகித் சர்மா விரும்பவில்லை. ரோகித் சர்மா கேப்டன்சியை ஏற்றுக் கொண்டதில் எனது பங்கு சிறிது உள்ளது என்றும் இந்திய கிரிக்கெட் சிறப்பாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் நான் பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்டேன். அதைத்தான் செய்தேன் என விளக்கமளித்தார்.
கூகுள் நிறுவனமானது I/O 2025 மாநாட்டில் கூகுள் மீட்டில் (Google Meet)-இல் Real-Time Speech Translation என்ற புதிய அம்சத்தை…
வாஷிங்டன் : அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவை 2025 மே…
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (மே 22, 2025) ராஜஸ்தான் மாநிலம் பிகானரில் இருந்து காணொலி வாயிலாக…
தஞ்சாவூர் : மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் உள்ள நாகப்பட்டினம்-திருச்சி நெடுஞ்சாலையில் மே 21, 2025 அன்று இரவு 8 மணியளவில்…
சத்தீஸ்கர்: மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவர் நம்பல கேசவ் ராவ் என்ற பசவராஜு உட்பட 27 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வரும் நிலையில், அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான…