என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி -அஷ்வின் ட்வீட்

‘Got a hero’s feeling every time I bowled’: Ashwin dedicates win to Chennai crowd

நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.

இந்திய – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் முதல் இரண்டு போட்டிகள் சென்னையில் நடைபெற்று முடிந்துள்ளது.சென்னை சேப்பாக்க மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 317 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளனர்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுகளும் ,இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளையும் அஸ்வின் வீழ்த்திருந்தார்.மேலும் இரண்டாவது இன்னிங்சில் 106 ரன்கள் அடித்தார்.இதனால் இந்த டெஸ்ட் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை அஸ்வின் வென்றார்.சிறப்பாக விளையாடிய அஸ்வினுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், நான் இப்போது எப்படி உணர்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை.என்னை வாழ்த்திய அனைவருக்கும் நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.என்னை ஒரு ஹீரோவாக உணரவைத்த அறிவார்ந்த சென்னை ரசிகர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.

unknown node