ஜி.பி.முத்து விருதை பெற்ற டேவிட் வார்னர்.. வைரலாகும் விருது..!

Default Image

ஐசிசி சிறந்த ஆண் டிக்டாக்கர் என்ற விருதை தனக்கு தானே டேவிட் வார்னர் வழங்கியுள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரான டேவிட் வார்னர் சிறந்த கிரிக்கெட் வீரர் மட்டுமல்லாமல், டிக்டாக் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். முக்கியமாக தென்னிந்திய படங்களின் பாடல்களுக்கு குடும்பத்துடன் நடனங்கள் ஆடி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றார். வார்னர் கொரோனா காலத்தில் தனது குடும்பத்துடன் சேர்ந்து ஆடல், பாடல் என டிக்டாக்கில் கலக்கினார்.

அதிலும், புட்டா பொம்மா பாடலுக்கு நடனம் ஆடி இந்திய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். அதுமட்டுமல்லாமல் தற்போது இந்தியாவில் ஏதேனும் ஒரு விஷயங்கள் நடந்தால் அதுகுறித்து ட்விட் போட ஆரம்பித்துள்ளார். மொத்தமாக சொல்லபோனால் வார்னர் தற்போது, இந்திய ரசிகர்கள் மத்தியில் ஒரு இந்தியராக உணரும் அளவிற்கு  ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by David Warner (@davidwarner31)

 

இந்நிலையில், சமீபத்தில் ஐசிசி கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய கிரிக்கெட் வீரர்களுக்கு ஐசிசி விருதுகளை வழங்கியது. இதைத்தொடர்ந்து, டேவிட் வார்னர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,  சார் ஜி.பி.முத்து விருதான இந்த தசாப்தத்தின் சிறந்த ஐசிசி சிறந்த ஆண் டிக்டாக்கர் என்ற விருதை பெறுவதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த விருதை தனக்கு தானே டேவிட் வார்னர் கொண்டுள்ளார். இவரின் இந்த பதிவு இணையதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war