ஐபிஎல் 2023 சீசனில் இருந்து குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் கேன் வில்லியம்சன் விலகல்!

ஐபிஎல் 2023 சீசனில் இருந்து காயம் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் கேன் வில்லியம்சன் விலகல் என தகவல்.

ஐபிஎல் 2023 சீசனில் இருந்து காயம் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் கேன் வில்லியம்சன் விலகல் என தகவல்.

ஐபிஎல் 2023-ன் 16-வது சீசன் ஐபிஎஸ் தொடரின் முதல் போட்டி நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், 4 முறை சாம்பியனான சென்னை சூப்பர் அணியும் பலபரிச்சை செய்தனர். போட்டி இறுதியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

பலத்த காயம்:

unknown node

இதனிடையே, டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருத்ராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். அப்போது, 10 ஓவர்களுக்குப் பிறகு சென்னை வீரர் ருதுராஜ் கெய்க்வாட் சிக்ஸர் அடித்த பந்தை தடுக்க முயன்ற போது, குஜராத் அணியின் நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

மருத்துவக் குழு உதவி:

unknown node

பவுண்டரி எல்லையில் துள்ளிக்குதித்து பந்தை பிடித்து உள்ளே வீசிய கேன் வில்லியம்சன் கீழே விழுந்தபோது முழங்காலில் பலத்த அடிபட்டது. அவரால் எழுந்திருக்க முடியவில்லை, பின்னர் அவருக்கு மருத்துவக் குழுவினர் வந்து உதவி செய்தனர். இத்தபின் மைதானத்தில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டார். சிறிய காயம் தான் இருக்கும் பேட்டிங் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பலத்த காயம் காரணமாக அவருக்கு பதிலாக சுதர்சன் பேட்டிங் வந்தார்.

வில்லியம்சன் விலகல்:

unknown node

காயத்தில் இருந்து குணமடைந்து அடுத்து போட்டியில் விளையாடுவார் என தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில், ஐபிஎல் 2023 சீசனில் இருந்து காயம் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார். நேற்றைய போட்டியில் பலத்த காயம் ஏற்பட்டதால் ஐபிஎல் 2023 சீசனில் இருந்து கேன் வில்லியம்சன் விலகினார் என தகவல் வெளியாகியுள்ளது. குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.