Daddy's boy: மகனுடன் ஜாலியாக குளியல் போடும் ஹர்திக் பாண்டியா.. வைரலாகும் புகைப்படம்!

Indian cricket team all-rounder Hardik Pandya shared a picture of having fun swimming in the pool with his son and written, "Daddy's boy"

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது மகனுடன் நீச்சல் குளத்தில் ஜாலியாக குளிக்கும் படத்தை “Daddy’s boy” தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டெஸ்ட், டி-20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ளது. மூன்றாம் டெஸ்ட் போட்டி, வரும் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள உலகிலே பெரிய மைதானமான மோதேரா பட்டேல் நடைபெறவுள்ளது.

இதற்காக இரு அணிகளும் அகமதாபாத்திற்கு சென்று, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. வீரார்கள், தங்களின் குடும்பத்தினருடன் தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது மகனுடன் நீச்சல் குளத்தில் ஜாலியாக குளிக்கும் படத்தை “Daddy’s boy” தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த டெஸ்ட் தொடரில் பாண்டியா இடம்பெற்றுள்ள நிலையில், அவர் தனது குடும்பத்தினருடன் அஹமதாபாத் சென்றுள்ளார். காயத்தில் இருந்து மீண்ட பாண்டியா, இன்னும் முழுமையாக பந்து வீச்சில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node