ஹாஷிம் அம்லா சர்வதேச அனைத்து போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவிப்பு !

தென்னாபிரிக்காவின் அதிரடி வீரர் ஹாஷிம் அம்லா சர்வதேச அனைத்து  போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.ஒருநாள் போட்டியில் அதிவிரைவாக 2,000, 3,000, 4,000,

தென்னாபிரிக்காவின் அதிரடி வீரர் ஹாஷிம் அம்லா சர்வதேச அனைத்து  போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார்.ஒருநாள் போட்டியில் அதிவிரைவாக 2,000, 3,000, 4,000, 5,000, 6 000 and 7000 ரன்களை கடந்தவர்.மேலும் ஒருநாள் போட்டியில் அதிவிரைவாக 10 சதங்களையும் கடந்தவர்.

அவர்  ஜூலை 2012-ம் ஆண்டு லண்டனின் தி ஓவல் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில்  ஆட்டமிழக்காமல்  311 ரன்கள் குவித்தார். இதுவே தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேனின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

181 ஒருநாள் போட்டி , 124 டெஸ்ட் போட்டி  , 44 டி 20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.அதில் 55 சதங்கள் மற்றும் 50 க்கும் மேற்பட்ட 88 ரன்கள் என 18672 ரன்கள் எடுத்து உள்ளார்.