உலகத்தில் இவர்தான் நம்பர் 1 பேட்ஸ்மேன்..! ஹர்பஜன் சிங் புகழாரம்..!

உலக கிரிக்கெட்டில் ஜோஸ் பட்லர் தான் நம்பர் ஓன் பேட்ஸ்மேன் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

உலக கிரிக்கெட்டில் ஜோஸ் பட்லர் தான் நம்பர் ஓன் பேட்ஸ்மேன் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

இந்தியன் பிரீமியர் லீக் 2023 இன் 17வது போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மூன்று ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், இந்த வெற்றி மூலம் தொடர்ச்சியாக இரண்டு போட்டிகளை ராஜஸ்தான் அணி வென்றது. ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து தனது அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினர். சிறந்த ஃபார்மில் விளையாடி வரும் ஜோஸ் பட்லரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக ஜோஸ் பட்லர் விளையாடிய இன்னிங்ஸிற்காக அவரைப் பாராட்டியுள்ளார். சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஜோஸ் பட்லரைப் புகழ்வதற்கு எனக்கு வார்த்தைகள் வரவில்லை, கிரிக்கெட் உலகில் அவர் திறமையான பேட்ஸ்மேன் என்றும் அவர் ஆடுகளத்தை கச்சிதமாக பயன்படுத்துவது மட்டுமல்லாமல் வெற்றியடைவதற்கான உத்திகளையும் வைத்திருக்கிறார் என்று கூறினார்.

மேலும்,  கிரிக்கெட்டில் கால் அசைவு என்பது மிகவும் முக்கியம், அந்தவகையில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கும் எதிராக தனது கால் அசைவுகளை வைத்து கட்சிதமாக விளையாடுகிறார். என்னைப் பொறுத்தவரை இந்த நேரத்தில் அவர் தான் உலக கிரிக்கெட்டில் நம்பர் 1 பேட்ஸ்மேன் என்று ஜோஸ் பட்லரை, ஹர்பஜன் சிங் புகழ்ந்து கூறியுள்ளார்.