நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக இதுவரை வெளியேறிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் லிஸ்ட் இதோ.
2023-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் கடந்த 31-ஆம் தேதி தொடங்கிய நிலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இம்முறை ஐபிஎல் போட்டிகள் உள்ளூர், வெளியூர் மைதானங்கள் அடிப்படையில் ஆட்டங்கள் நடைபெற்று வருவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் பல்வேறு புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
காயம் அணிகளுக்கு பின்னடைவு:
unknown nodeஇந்த சமயத்தில் ஐபிஎஸ் தொடர் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வாரம் முடிய உள்ள நிலையில், 10 அணிகளிலும் பல்வேறு சுவாரசியங்கள் நிறைந்துள்ளது. தோனியின் அதிரடி, இளம் வீரர்களின் அசத்தல் பேட்டிங் அண்ட் பவுலிங் என ஒவ்வொரு அணிகளும் பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. ஆனால், இந்தாண்டு ஐபிஎஸ் போட்டி தொடங்குவதற்கும் முன்னும், பின்னும் காயம் காரணமாக அனைத்து அணிகளுக்கும் பெரும் பின்னடவைவை ஏற்படுத்தியுள்ளது.
மாற்று வீரர்கள் தேர்வு:
unknown nodeவீரர்களுக்கு காயம் என்பதே தொடர் கதையாகவே உள்ளது. இது தான் இந்தாண்டு ஐபிஎஸ் தொடரின் குறையாக கருதப்படுகிறது. அதன்படி, ஐபிஎஸ் தொடருக்கு முன்னரே காயங்களால் விலகிய வீரர்கள் முதல், போட்டியின்போது காயமடைந்த வீரர்கள் வரை பட்டியல் நீண்டுள்ளது. இதில், காயமடைந்த பல வீரர்களுக்கு மாற்று வீரர்களையும், அந்தெந்த அணிகள் தேர்வு செய்துள்ளனர்.
டெல்லி மற்றும் மும்பை:
unknown nodeஇதில் குறிப்பாக கடந்த டிசம்பரில் கார் விபத்தில் சிக்கிய நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், ஐபிஎஸ் தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக டெல்லி அணியில் விக்கெட் கீப்பர்-பேட்டராக இருக்கும் அபிஷேக் போரல் தேர்வு செய்யப்பட்டார். இதுபோன்று, மறுபக்கம் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவரும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இது மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இருப்பினும், பும்ராவுக்கு மாற்று வீராக வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் வாரியாரை எடுத்துள்ளனர். மும்பை அணியில் மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன் விலகினார்.
சென்னை மாற்று வீரர்கள்:
unknown nodeஅதேபோல், சென்னை அணிக்கு கடந்த வருடம் சிறப்பாக பந்து வீசிய முகேஷ் சவுத்ரி இந்த வருடம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரராக இருந்தார். ஆனால், பயிற்சியின்போது காயம் ஏற்பட்டதால் ஆகாஷ் சிங்-ஐ ஒப்பந்தம் செய்தது சிஎஸ்கே அணி. மேலும், சென்னை அணியில் ஒரு அடி விழுந்தது. மினி ஏலத்தில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமீசனை சென்னை நிர்வாகம் வாங்கியது. ஆனால், அவரும் போட்டி தொடங்குவதற்கு முன்னரே காயம் காரணமாக விலகினார். அவருக்கு பதிலாக தென்னாப்ரிக்காவின் சிசந்தா மகலா ஒப்பந்தமானார்.
ராஜஸ்தான் – பஞ்சாப் – ஆர்சிபி:
unknown nodeராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதில் சந்தீப் ஷர்மா எடுக்கப்பட்டார். பஞ்சாப் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஜானி பேர்ஸ்டோவுக்கு பதில் ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார். ஆர்சிபி அணியில் வில் ஜாக்ஸ் கடைசி நேரத்தில் காயம் காரணமாக விலகியதால், நியூசிலாந்து ஆல் ரவுண்டர் மிச்சேல் பிரேஸ்வெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆர்சிபியில் மேலும் ஒரு வீரரான ரஜித் படித்தார் விலகினார்.
கே.கே.ஆர் – குஜராத்:
unknown nodeகே.கே.ஆர். அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் காயமடைந்து தொடரை விட்டு விலகினார். மற்றோரு வீரரான ஷகிப் அல் ஹசனுக்கு பதிலாக ஜேசன் ராயை எடுத்துள்ளது. குஜராத் அணி பீல்டிங் செய்யும்போது கீழே விழுந்து காலில் காயம் ஏற்பட்டதால் கேன் வில்லியம்சன்னுக்கு பதிலாக டாசன் ஷாணகா சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், பஞ்சாப் அணியில் ராஜ் பவார் காயம் காரணமாக விலகினார். எந்த ஆண்டும் இல்லாத அளவில் இம்முறை அனைத்து அணிகளிலும் காயம் காரணமாக பல வீரர்கள் நடப்பு ஐபிஎஸ் தொடரில் இருந்து விலகியிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.