தல தோனியுடன் நிகழ்ந்த மகிழ்ச்சியான சந்திப்பை, குஷ்பு தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது தற்போது வைரலாகி வருகிறது.
சிஎஸ்கே கேப்டன் தல தோனியை தனது மாமியாருடன் சந்தித்த நிகழ்வை, நடிகை குஷ்பு தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து குஷ்பு தனது ட்விட்டரில் கூறியதாவது, ஹீரோக்கள் எப்போதும் உருவாக்கப்படுவதில்லை, அவர்கள் பிறக்கிறார்கள், இதனை தோனி நிரூபித்துள்ளார். இந்த சந்திப்பு நிகழ்வை சாத்தியப்படுத்தியதற்காக நான் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
unknown nodeசிஎஸ்கே விற்காக எங்கள் கேப்டன் தல தோனி பற்றி பேசும் போது எனக்கு வார்த்தைகளே வரவில்லை, தோனியின் சிறந்த குணம் அவரது அரவணைப்பு மற்றும் விருந்தோம்பலில் தெரிகிறது. தோனி, என் 88 வயதான மாமியாரை சந்தித்தார். ஹீரோ என்றால் தோனி தான் என அவரை வணங்குகிறார்கள். ஆனால் அவரைப் போல ஒருவரை பார்ப்பது கடினம்.
மஹி, நீ என் மாமியாரின் வாழ்வில் மேலும் பல வருடங்கள் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் சேர்த்திருக்கிறாய். இதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். CSK க்கு விசில் போடு என்று குஷ்பு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
unknown node