இமாச்சல பிரதேச கிரிக்கெட் வீரர், 28 வயதில் காலமானார்.!

இமாச்சல பிரதேச கிரிக்கெட் வீரர் சித்தார்த் சர்மா, தனது 28 வயதில் காலமானார்.

இமாச்சல பிரதேச கிரிக்கெட் வீரர் சித்தார்த் சர்மா, தனது 28 வயதில் காலமானார்.

இமாச்சல பிரதேச வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த் சர்மா தனது 28 ஆவது வயதில் வியாழக்கிழமை இரவு காலமானார். சில காலமாகவே நோயினால் அவதிப்பட்டு வந்த சித்தார்த், குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக வென்டிலேட்டரில் சிகிச்சை பெற்று வந்தார்.

இமாச்சல பிரதேசத்தின் உனாவில் பிறந்த வேகப்பந்து வீச்சாளரான சித்தார்த் சர்மா, நடப்பு ரஞ்சி டிராபி சீசனில் இரண்டு போட்டிகளில் 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவர் 2021-22 விஜய் ஹசாரே டிராபியை வென்ற, இமாச்சல பிரதேசத்தின் அணியில் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேகப்பந்து வீச்சாளர் சித்தார்த், இறந்த செய்தியை இமாச்சல பிரதேச முதல்வர் அலுவலகம் வெளியிட்டது. மேலும் இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, அவரது குடும்பத்திற்கு தனது வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும்  தெரிவித்தார்.